மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசையர் உற்பத்தி நிறுத்தம்

மாருதி நிறுவனத்தின் மானசேர் ஆலையின் ஆண்டுக்கான டீசல் என்ஜின் உற்பத்தி திறன் 3 லட்சம் ஆகும். தொடர் விற்பனை சரிவின் காரணமாக டீசல் என்ஜின், ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் அதிகப்படியான இருப்பினை குறைக்கும் விதத்தில் உற்பத்தினை தற்காலிகமாக மாருதி நிறுத்தி வைத்துள்ளது.

மாருதி சுசூகி ஸ்விப்ட்

டிசையர் காரின் விற்பனை கடந்த மாதம் 12,258 என சரிவடைந்து மிக பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது மே மாதத்தினை விட 6000 த்திற்க்கு அதிகமாக குறைந்துள்ளது.

அதிகப்படியான போட்டி மற்றும் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாகவே இந்தியாவின் ஒட்டுமொத்த கார் சந்தையே சரிவை பெருமளவு சந்தித்துள்ளது.  மேலும் மானசேர் ஆலையின் 200 கான்டராக்ட் தொழிலாளர்களுக்கு காலவரையற்ற விடுப்பினை தந்துள்ளதாம்.

Comments