மீண்டும் ஃபியட் லீனியா டி-ஜெட்

    ஃபியட் நிறுவனம் இந்தியாவில் டாடாவுடன் இணைந்து செயல்பட்ட பொழுது தனக்கென வளமையான கட்டமைப்பை உருவாக்க தவறியதால் லீனியா டி-ஜெட் காரை கடந்த ஆண்டு விற்பனை குறைவால் முற்றியிலும் நிறுத்தப்பட்ட லீனியா டி-ஜெட் மீண்டும் களமிறங்கியுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக டீலர்களை திறந்து வருகின்றது. முதலில் 8 மெட்ரோ நகரங்களில் மட்டும் லீனியா டி-ஜெட் விற்பனைக்கு வந்துள்ளது.

    முன்பு இரண்டு விதமான மாறுபட்டவையில் மட்டும் இருந்த டி-ஜெட் தற்பொழுது கூடுதலாக ஒரு வேரியண்ட்டை இணைத்துள்ளது. சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தக்கூடிய காராக டி-ஜெட் வலம் வரும்.

    1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 114 பிஎச்பி ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஃபியட் லீனியா டி-ஜெட்
    ads

    மழை வரும்பொழுது வைப்பர் தானாகவே இயங்கும், ஏபிஎஸ், காற்றுப்பைகள், இபிடி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , 16 இஃச் ஆலாய் வீல் மற்றும் லெதர் இருக்கைகள் கொண்டு இருக்கின்றது.

    இம்முறை கூடுதலாக எமோஷன் வேரியண்ட் இணைத்துள்ளது.

    லீனியா டி-ஜெட் விலை விபரம்(தில்லி விலை)

    லீனிடியா டி-ஜெட் ஆக்டிவ்: ரூ.7.60 இலட்சம்
    லீனிடியா டி-ஜெட் டைனமிக்: ரூ.8.40 இலட்சம்
    லீனிடியா டி-ஜெட் எமோஷன்: ரூ.8.80 இலட்சம்

    Comments