மெர்சிடிஸ் மேபக் S600 சொகுசு கார் இந்தியா வருகை

மெர்சிடிஸ் மேபக் சொகுசு லிமோசின் ரக காரினை இன்னும் சில வாரல்களில் இந்தியாவிற்க்கு விற்பனைக்கு கொண்டு வர மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார் சொகுசு மற்றும் சிறப்பான இடவசதி பெற்றிருக்கும்.

மெர்சிடிஸ் மேபக் S600

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை விட 200மிமீ கூடுதலான நீளம் கொண்ட மெர்சிடிஸ் மேபக் எஸ் 600 காரில் மிக சொகுசான இருக்கைகள் மற்றும் நிசப்தமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் சோதனைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மெர்சிடிஸ் மேபக் எஸ் 600 காரில் 523எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.0 லிட்டர் பை டர்போ என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 830என்எம் ஆகும். இதில் 7 வேக தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் மேபக் S600 காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 209 கிமீ ஆகும்.

மேபக் S600 காரில் பாதுகாப்பிற்க்கும் சொகுசு வசதிக்கும் எவ்விதாமான குறைகளும் இல்லாமல் மிக நேர்த்தியாக இருக்கும்.

ads

Mercedes-Maybach S600 to launched in India

Comments