மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் – ஒப்பீடு

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் , ஹோண்டா ஆக்டிவா 3ஜி மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் என மூன்று ஸ்கூட்டர்களை ஒப்பீடு செய்து சிறப்பு பார்வையாக இந்த செய்தி தொகுப்பினை கானலாம்.

hero-maestro-edge மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் - ஒப்பீடு
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

மாத விற்பனையில் கடந்த சில மாதங்களாக முன்னிலை வகித்து வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கும் சிறப்பான எண்ணிக்கை பதிவு செய்துவரும் ஜூபிடர் ஸ்கூட்டருக்கும் சரி நிகரான சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

தோற்றம்

நவீன காலத்திற்க்கு ஏற்ப சிறப்பான வடிவமைப்பினை உணர்ந்து ஹீரோ மோட்டாகார்ப் செய்பட்டுள்ளதால் மிகவும் ஸ்டைலிசான் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதற்க்கு ஈடுகொடுக்கும் வகையில் டிவிஎஸ் ஜூபிடர் உள்ளது. ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் பழைய டிசைனிலே இன்னும் உள்ளது.

%25E0%25AE%259C%25E0%25AF%2582%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் - ஒப்பீடு
TVS Jupiter

என்ஜின்

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் புதிய 8.31எச்பி ஆற்றலை வழங்கும் 110.9சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.3என்எம் ஆகும்.

ஜூபிடர் ஸ்கூட்டரில் 8எச்பி ஆற்றலை வழங்கும் 109.2சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் மற்ற இரண்டை விட அதிகம் 8.83என்எம் ஆகும்.

mastero-edge-jupiter-activa3g மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் - ஒப்பீடு
மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் – ஒப்பீடு 

ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரில் 8எச்பி ஆற்றலை வழங்கும் 109.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8என்எம் ஆகும்.

மூன்றுமே ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களாகும்.

மைலேஜ்

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 65.8கிமீ மற்றும் ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 62கிமீ மேலும் ஜூபிடர் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ ஆகும்.

 சிறப்பம்சங்கள்

ஜூபிடர் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் இரண்டுமே நவீன காலத்துக்கு ஏற்ப பல வசதிகளை வழங்கியுள்ளது. ஆனால் ஆக்டிவா 3ஜி இதில் பின் தங்கியுள்ளது.

honda-activa-3g மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் - ஒப்பீடு
ஹோண்டா ஆக்டிவா 3ஜி

குறிப்பாக வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வசதி , மொபைல் சார்ஜிங் போர்ட் , லக்கேஜ் பாக்சில் விளக்கு , ரிமோட் இருக்கை திறப்பு , ரீமோட் எரிகலன் திறப்பு , எல்இடி டெயில் விளக்குகளை மேஸ்ட்ரோ எட்ஜ் பெற்றுள்ளது.

இதற்க்கு ஈடுகொடுக்கும் வகையில் சில வசதிகளை டிவிஎஸ் ஜூபிடரும் பெற்றுள்ளது. ஆனால் ஆக்டிவா 3ஜி இதுபோன்ற நவீன வசதிகளை இல்லாமல் பின் தங்கியுள்ளது.

யார் ரியல் ஹீரோ ?

ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரின் வலுவான அடிதளத்தை நிச்சயமாக இனி ஆட்டம் காணபோவது உறுதியாகியுள்ளது. ஹீரோவின் நவீன நுட்பங்கள் , மைலேஜ் மற்றும் செயல்திறன் போன்றவற்றில் தன் போட்டியாளர்களை விட சிறப்பாக உள்ளது.

hero-mastero-edge மேஸ்ட்ரோ எட்ஜ் Vs ஆக்டிவா 3ஜி Vs ஜூபிடர் - ஒப்பீடு

பணத்திற்க்கு ஏற்ற மதிப்பினை வழங்குவதிலும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் சிறந்து விளங்கும் என்பதனால் சிறப்பான வரவேற்பினை பெறுவது உறுதியாகியுள்ளது.

Hero Maestro Edge vs Honda Activa 3G vs TVS Jupiter – Comparison

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin