யமஹா ஆர்15 பைக்கில் புதிய வண்ணங்கள்

மிகவும் ஸ்டைலிசான யமஹா ஆர்15 V2.0 பைக்கில் புதிய வண்ணங்களை சேர்த்து விலையை உயர்த்தி புதிய யமஹா ஆர்15 பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

yamaha-R15-bike-e1455889997578 யமஹா ஆர்15 பைக்கில் புதிய வண்ணங்கள்

எவ்விதமான மெக்கானிக்கல் மற்றும் தோற்ற டிசைன் மாற்றங்கள் இல்லாமல் புதிய வண்ணங்களாக ரெவிங் நீலம் , ஸ்பார்கி கீரின் மற்றும் அட்ரனாலைன் சிவப்பு என மொத்தம் மூன்று புதிய கலர்கள் இணைக்கப்பட்டு இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

17 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 149cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 15 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ஸ்பீளிட் இருக்கைகளுடன் விளங்கும் ஆர்15 பைக்கின் இருபக்கங்களிலும் டிஸ்க் பிரேக் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் ரியர் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விலை ரூ.4252 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  முந்தைய மாடலை போல இரண்டு விலை அல்லாமல் யமஹா R15 பைக்கின் புதிய விலை ரூ.1.18,373 ஆகும். (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

Yamaha-R15-V2-Adrenaline-Red யமஹா ஆர்15 பைக்கில் புதிய வண்ணங்கள் Yamaha-R15-V2-Sparky-Green யமஹா ஆர்15 பைக்கில் புதிய வண்ணங்கள்

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin