யமஹா ஆர்15 v2 Vs யமஹா ஆர்15 எஸ் – வித்தியாசம் என்ன

யமஹா ஆர்15 எஸ் பைக்கிற்க்கும் யமஹா ஆர் 15 வெர்சன் 2.0 பைக்கிற்க்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன ? யமஹா ஆர்15 v2 Vs யமஹா ஆர்15 எஸ் எது பெஸ்ட் சாய்ஸ் தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்க்கு ஏற்ப ஸ்போர்ட்டிவ் ஸ்பிளிட் இருக்கைகளுக்கு பதிலாக சாரதரன ஒற்றை இருக்கை மாடலாக மட்டும் விற்பனைக்கு வந்த யமஹா ஆர்15 எஸ் பைக்கானது யமஹா ஆர்15 v2 பைக்குடன் ஒப்பீட்டால் சில முக்கிய வித்தியாசங்களை பெற்றுள்ளது.

தோற்றம்

முகப்பு தோற்றத்தில் ஆர்15 மற்றும் ஆர்15 எஸ் என இரண்டு ஒரே தோற்றத்தினை பகிர்ந்துகொண்டுள்ளத்து. பக்கவாட்டிலும் பெரிதான வித்தியாசங்கள் இல்லை. ஆனால் ஆர்15 பைக்கில் பிரிக்கப்பட்ட இரட்டை இருக்கைகள் , ஆர்15 எஸ் பைக்கில் ஒற்றை இருக்கையை கொண்டுள்ளது.

பின்புறத்தில் யமஹா ஆர்15 v2 பைக்கில் எல்இடி டெயில் விளக்குகள் ஆனால் யமஹா ஆர்15 எஸ் பைக்கில் சாதரன டெயில் விளக்குகள் உள்ளது.

அளவுகள்

உயரம் , அகலம் மற்றும் வீல்பேஸ் போன்றவற்றில் இரண்டு பைக்கிற்க்கும் எந்த வித்தியாசங்களும் இல்லை. ஆனால் பைக்கின் நீளத்தில் யமஹா ஆர்15 எஸ் நீளம் 2060மிமீ உள்ளது. யமஹா ஆர்15 v2 பைக்கை விட 90மிமீ கூடுதலாகும்.

என்ஜின்

 இரண்டு பைக்கிலும் ஒரே 149சிசி திரவத்தினால் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தாலும் ஆற்றல் வித்தியாசங்கள் உள்ளது.

யமஹா ஆர்15 v2 பைக் ஆற்றல் 17எச்பி மற்றும் டார்க் 15என்எம் ஆகும்.
யமஹா ஆர்15 எஸ் பைக் ஆற்றல் 16.6எச்பி மற்றும் டார்க் 14.6என்எம் ஆகும்.

ஆனால் இரண்டிலும் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

எடை

யமஹா ஆர்15 v2 பைக் எடை 136கிலோ மற்றும்  யமஹா ஆர்15 எஸ் பைக் எடை 134கிலோ ஆகும்.

விலை

யமஹா ஆர்15 v2 பைக் விலை ரூ. 1.17 லட்சம்

யமஹா ஆர்15 எஸ் பைக் விலை ரூ. 1.14 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Yamaha R15 V2 Vs Yamaha R15 S – Comparison