யமஹா ஆர்3 முன்பதிவு தொடங்கியது

யமஹா ஆர்3 ஸ்போர்ட்டிவ் பைக்கிற்க்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வரும் 11ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள யமஹா R3 பைக்கின் விலை ரூ.3 லட்சத்தில் தொடங்கலாம்.

யமஹா R3 பைக்
யமஹா R3 பைக்

யமஹா R3 பைக்  பாகங்களை தருவித்து இந்தியாவிலே அசெம்பிளிங் செய்யப்பட உள்ளதால் சவாலான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் யமஹா R25 மாடலும் இந்தியா வரலாம் என தெரிகின்றது.

யமஹா YZF-R3 பைக்கில் 40.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 321சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்கு விசை 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

யமஹா ஆர்3 பைக்கிற்க்கு போட்டியாக கவாஸாகி நின்ஜா 300 மற்றும் கேடிஎம் ஆர்சி390 போன்றவை விளங்கும்.

ads

ரூ.10000 செலுத்தி யமஹா ஆர்3 பைக்கிற்க்கு டீலர்கள் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். R3 சிறப்பான வரவேற்பினை பெறுவதற்க்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளது.

Yamaha R3 Bookings begin

Comments