யமஹா எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகம்

யமஹா மோட்டார்சைக்கிள் PES2 மற்றும் PED2 என்ற பெயரில் இரண்டு எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு PES1 மற்றும் PED1 எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்தது.

2015-Yamaha-PES2-Concept யமஹா எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகம்
யமஹா PES2 எலக்ட்ரிக் பைக்

வரும் 2016ம் ஆண்டில் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள யமஹா முந்தைய மாடல்களான PES1 மற்றும் PED1 கான்செப்ட்களின் அடிப்படையில் இருக்கும்.

பிஇஎஸ் பைக்குகள் ஸ்டீரிட் ஸ்போர்ட் பைக்குகளாக விளங்கும். பிஇடி எலக்ட்ரிக் பைக்குகள் டர்ட் ஸ்போர்ட் பைக் இவற்றில் டிசி பிரஷ்லெஸ் மோட்டாருடன் லித்தியம் ஐன் பேட்டரியை பெற்றிருக்கும். மோட்டார் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

2015-Yamaha-PED2-Concept யமஹா எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகம்
யமஹா PED2 எலக்ட்ரிக் பைக்

இரண்டாம் கிளாஸ் அடிப்படையில் உருவாக உள்ள அதாவது 50சிசி முதல் 125சிசி பைக்குகளுக்கு இணையான ஆற்றலை வழங்கும் வகையில் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் விளங்கும். 44வது டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ளது.

2015-Yamaha-PED2 யமஹா எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகம்

2015-Yamaha-PES2 யமஹா எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகம்
Yamaha PES2 and PED2 electric bike concepts unveiled
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin