யமஹா பேசினோ விற்பனை அமோகம்

யமஹா நிறுவனம் இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து ஸ்கூட்டர் சந்தையை விரிவுபடுத்தி வருகின்றது. அந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா பேசினோ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

yamaha-fascino யமஹா பேசினோ விற்பனை அமோகம்

கிளாசிக் தோற்றத்தில் எளிதாக கவர்ந்திழுக்கும் வடிவமைப்பினை கொண்டுள்ள ஃபேசினோ ஸ்கூட்டர் , ரே , ரே இசட் , ஆல்ஃபா போன்ற ஸ்கூட்டர்களுக்கு பின்பு விற்பனைக்கு வந்தது.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டி மாடலாக வந்த ஃபேசினோ  ஸ்கூட்டரில் 113சிசி பூளூ கோர் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 66 கிமீ ஆகும்.

மேலும் படிக்க ; யமஹா பேசினோ விலை விபரம்

வட்ட வடிவ முகப்பு விளக்குகளுடன் கிளாசிக் தோற்றத்தில் ஸ்டைலிசாக விளங்கும் ஃபேசினோ மிக விரைவாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

yamaha-fascino-rear யமஹா பேசினோ விற்பனை அமோகம்

வெஸ்பா LX 125 மாடலை விட ரூ.15000 குறைவு என்பதால் மிக எளிதாக சந்தையில் நல்லதொரு தொடக்கத்தை யமஹா ஃபேசினோ பெற்று வெஸ்பாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் யமஹாவின் ஸ்கூட்டர் மாடல்களில் அதிக விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது

Yamaha Fascino gets good response

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin