யமஹா MT-03 பைக் விவரங்கள் வெளிவந்தது

யமஹா எம்டி-03 பைக்கின் படங்கள் மற்றும் விவரங்களை யமஹா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ளது. யமஹா MT-03 பைக் மாடல் ஆர்3 மாடலின் நேக்டு மாடலாக காட்சியளிக்கின்றது.

Yamaha-mt-03 யமஹா MT-03 பைக் விவரங்கள் வெளிவந்தது

யமஹா YZF-R3 மாடலின் பெரும்பாலான பாகங்களை MT-03 பைக்கும் பெற்றிருக்கின்றது. புதிய யமஹா MT-03 பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆர்3 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே டைமன்ட் வகை ஸ்டீல் அடிச்சட்டத்தினை பெற்றுள்ளது.  மேலும் 40.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 29.6என்எம் ஆகும்.

Yamaha-MT-03-black யமஹா MT-03 பைக் விவரங்கள் வெளிவந்தது

ஆர்3 பைக்கில் உள்ள அதே பிரேக் ஆப்ஷன் மற்றும் சஸ்பென்ஷன்களை பெற்றுள்ளது. இதில் ஏபிஎஸ் ஆப்ஷன் மாடலும் இருக்க வாய்ப்புகள் உள்ளது.  MT-03 பைக் இந்திய்யாவில் பாகங்களை தருவித்து ஒருங்கினைக்க வாய்ப்பு உள்ளது. ஆர்3 பைக்கில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்சங்கள் இதில் இருக்காது என்பதனால் ஆர்3 பைக்கை விட 4 கிலோ வரை எடை குறைவாக இருக்கும்.

கருப்பு , சில்வர் மற்றும் சிகப்பு என 3 வண்ணங்களில் வரவுள்ளது. யமஹா MT-03 பைக்கின் போட்டியாளர்கள் பெனெல்லி டிஎன்டி 300 , கவாஸாகி இசட் 250 மற்றும் கேடிஎம் டியூக் 390 போன்றவை ஆகும். எம்டி-03 பைக் அடுத்த வருடத்தில் இந்தியவில் விற்பனைக்கு வரும்.

Yamaha-MT-03-red யமஹா MT-03 பைக் விவரங்கள் வெளிவந்தது

Yamaha MT-03 revealed details

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin