யமஹா R1S பைக் அறிமுகம்

யமஹா ஆர்1 மாடலில் புதிய ஆர்1 எஸ் தொடக்க நிலை வேரியண்ட்டினை யமஹா மோட்டார் அறிமுகம் செய்துள்ளது. யமஹா YZF – R1S  பைக் YZF -R1 மாடலுக்கு பேஸ் மாடலாக இருக்கும்.

yamaha-r1s யமஹா R1S பைக் அறிமுகம்

இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் ஆர்1 பைக் ரூ.22.34 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனை விட ரூ.2 லட்சம் வரை விலை குறைவான மாடலாக R1S இருக்கும்.

யமஹா ஆர்1 பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வந்துள்ள ஆர்1 எஸ் மாடல் ஆர்1 பைக்கில் இருந்த சில வசதிகளை இழந்துள்ளது. மெக்னீசியம் அலாய் வீலுக்கு பதிலாக 5 ஸ்போக்குகளை கொண்ட அலுமினிய அலாய் வீலை பெற்றுள்ளது. மேலும் டைட்டானியம் பயன்படுத்தப்பட்டிருந்த கனெக்டிங் ராட் ஸ்டீலுக்கு மாறியுள்ளது. ஆயில் பேன் , வலப்பக்க என்ஜின் கவர் போன்றவை அலுமினியத்தை பெற்றுள்ளது.

yamaha-r1s-side1 யமஹா R1S பைக் அறிமுகம்

ஸ்டீல் கனெக்டிங் ராட் பெற்றுள்ளதால் வால்வ் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளதால் ரெட்லைன் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஆர்1 பைக்கை 4 கிலோ கூடுதலாக எடை உள்ளது. ஆர்1 எஸ் எடை 203.2 கிலோ ஆகும்.  மற்றபடி ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லை

200பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 112.4என்எம் ஆகும். இதில் 6வேக கியர்பாக்ஸ் உள்ளது.

அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள யமஹா ஆர் 1 எஸ் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம்.

yamaha-r1s-ride யமஹா R1S பைக் அறிமுகம்
yamaha-r1s-side யமஹா R1S பைக் அறிமுகம்
yamaha-r1s-gray யமஹா R1S பைக் அறிமுகம்

Yamaha R1S sports Bike unveiled 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin