யூஎம் மோட்டார்சைக்கிள் டீலர்கள் விபரம்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் ரெனிகேட் வரிசை பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் 25 டீலர்களை நாடு முழுவதும் நியமிக்க உள்ளது.

um-renegade-commando-bike யூஎம் மோட்டார்சைக்கிள் டீலர்கள் விபரம்

ஏப்ரல் மத்தியில் டீலர்களை தொடங்க உள்ள யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதனை தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பைக்குகளை டெலிவரி செய்ய உள்ளது.  தற்பொழுது ரெனிகேட் கிளாசிக் , ரெனிகேட் கமாண்டோ , ரெனிகேட் ஸ்போர்ட் S என மொத்தம் 3 யூஎம் ரெனேகேட் சீரிஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

யூஎம் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

  1. யூஎம் ரெனிகேட் கிளாசிக் – ரூ. 1.69 லட்சம்
  2. யூஎம் ரெனிகேட் கமாண்டோ – ரூ.1.59 லட்சம்
  3. யூஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ. 1.49 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

மூன்று மாடல்களிலும் 25 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 279சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 27.8 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குளுக்கு நேரடியான போட்டியாக வந்துள்ள ரெனிகேட் பைக்குகள் மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ளது. தமிழகத்தில் சென்னை , கோவை மற்றும் மதுரை என மூன்று நகரங்களில் தன் சேவை மையங்களை தொடங்க உள்ளது.

UM-Motorcycles-Dealership-Network யூஎம் மோட்டார்சைக்கிள் டீலர்கள் விபரம்

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin