யூஎம் ரெனிகேட் மோட்டார்சைக்கிள் 1000 முன்பதிவு பெற்றுள்ளது

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யூஎம் ரெனிகேட் மோட்டார்சைக்கிள்  அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுதும் 25 டீலர்களை நியமித்துள்ள யூஎம் இதுவரை 1000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜூன் மத்தியில் டெலிவரி தொடங்க உள்ளது.

um-renegade-sport-s

loading...

ரெனிகேட் மோட்டார்சைக்கிள் வரிசைகளில் 25 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 279சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 27.8 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ரெனிகேட் கிளாசிக் , ரெனிகேட் கமாண்டோ , ரெனிகேட் ஸ்போர்ட் S போன்ற மாடல்கள் தோற்ற வித்தியாசத்தை மட்டுமே பெற்றுள்ள நிலையில் என்ஜின் செயல்திறன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் போன்றவற்றில் மூன்று பைக்குகளிலும் ஒன்றாகும்.

யூஎம்  மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

  1.  ரெனிகேட் கிளாசிக் – ரூ. 1.69 லட்சம்
  2.  ரெனிகேட் கமாண்டோ – ரூ.1.59 லட்சம்
  3.  ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ. 1.49 லட்சம்

தமிழகத்தில் சென்னை , கோவை மற்றும் மதுரை என மூன்று நகரங்களில் தன் சேவை மையங்களை தொடங்க உள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ள ரெனிகேட் பைக்குகள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

um-renegade-commando-bike

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin