ரெடி-கோ கார் 10,000 முன்பதிவுகளை கடந்தது – டட்சன்

நிசான் பட்ஜெட் பிராண்டான டட்சன் நிறுவனத்தின் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யபட்ட ரெடி-கோ ஹேட்ச்பேக் கார் 10,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் 3000 கார்களுக்கு மேல் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

datsun-redi-go-car

மாருதி ஆல்ட்டோ 800 , ஹூண்டாய் இயான் , ரெனோ க்விட் போன்ற தொடக்கநிலை கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் மாடலாக அர்பன் ரக க்ராஸ் வடிவ யூகான் டிசைன் தாத்பரியங்களை கொண்டு விளங்கும் ரெடி கோ காரில் க்விட் கார் பெற்றிருந்த அதே 0.8லி இஞ்ஜினை பெற்றுள்ளது.

799சிசி பெட்ரோல் இஞ்ஜின் 53 bhp ஆற்றல் மற்றும் 72  Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற்றுள்ள ரெடிகோ கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.17 கிலோமீட்டர் ஆகும்.

கடந்த ஜூன் 7ந் தேதி விற்பனைக்கு வந்த ரெடிகோ 23 நாட்களில் 3000 கார்கள் டெலிவரி செய்தது குறிப்பிடதக்க அம்சமாகும் . தற்பொழுது விற்பனைக்கு வந்து 1 மாதம் கடந்துள்ள நிலையில்  10,000 ரெடி-கோ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இவற்றில் பெரும்பாலான முன்பதிவுகள் மாநகரங்கள் மற்றும் இரண்டாம் கட்ட தகரங்களில் இருந்தே பெற்றுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.

மேலும் படிங்க ; ரெடி-கோ கார் வாங்கலாமா ?