ரெனோ க்விட் மைலேஜ் விபரம் வெளியானது

புதிய ரெனோ க்விட் கார் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் ரெனோ க்விட் மைலேஜ் விபரம் வெளிவந்துள்ளது. ரெனோ க்விட் கார் விலை ரூ.3 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும்.

ரெனோ க்விட்

மினி டஸ்ட்டர் போல காட்சியளிக்கும் ரெனோ க்விட் தொடக்க நிலை ஹேட்ச்பேக் கார்களில் சற்று வித்தியாமாக எஸ்யூவி தோற்ற கட்டமைப்பினை கொண்டு விளங்குகின்றது.

3.68மீட்டர் நீளம் கொண்ட க்விட் காரின் அகலம் 1.58மீட்டர் ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180மிமீ மற்றும் பூட் கொள்ளளவு 300லிட்டர் ஆக இருக்கும். இதன் மூலம் தொடக்க நிலை கார்களில் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட மாடலாக விளங்கும்.

57 எச்பி ஆற்றலை அளிக்கும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 74என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் வரலாம் . இதில் ஏஎம்டி கியர்பாக்ஸூடன் வரும். ஆனால் இது சற்று தாமதமாக வரும்.

ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25கிமீ ஆகும். டாப் வேரியண்டில் ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் இருக்கும்

ads

இந்திய வாடிக்கையாளர்களை உணர்ந்து மிக சவாலான தோற்றம் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் உள்நாட்டிலே 97 சதவீத பாகங்களை பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் இந்த காரின் விலை ரூ.3 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியண்டில் 4 லட்சத்தில் முடியும்.

தற்பொழுது ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் . ரெனோ க்விட் இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வரலாம்.

Renault Kwid Specs leaked

Comments