ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் இந்தியாவில்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.4.6 கோடி விலையில் ரயீத் சொகுசு காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பல அதிநவீன வசதிகளுடன் விளங்கும் ரயீத் கார் சிறப்பான வரவேற்பினை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோல்ஸ்ராய்ஸ்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் காரில் மிகவும் சக்தி வாய்ந்த வி12 ட்வீன்-டர்போ 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகப்பட்ச ஆற்றல் 624பிஎச்பி மற்றும் டார்க் 800என்எம் ஆகும். 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0-100கிமீ வேகத்தினை தொட 4.6 விநாடிகளில் எட்டிவிடும்.

21 இன்ச் 5 ஸ்போக் கொண்ட ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. மிக அதிநவீன சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காற்று சஸ்பென்ஷன்கள் வாகனத்தின் வேகத்திற்க்கு தகுந்தவாறு இதன் அமைப்பினை மாற்றிக்கொள்ள முடியும்.

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்
ads

சாலையின் தன்மைகளை செயற்க்கைகோள் உதவியுடன் உணர்ந்து அதற்க்கு ஏற்றார் போல கியர்களை தானாகவே மாற்றிக்குகொள்ளும். இரவு நேரங்களில் பயணம் செய்யும் பொழுது ஆகாயத்தில் மிதக்கும் அனுபவத்தினை தரவல்ல வகையில் அப்ஹோல்ஸ்டரியில் 1,340 நட்சத்திர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பல நவீன வசதிகளை கொண்டுள்ள ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் காரின் விலை 4.6 கோடியாகும்(டெல்லி விலை)

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத்

Comments