ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் – எதிர்கால கனவு மாளிகை

ரோல்ஸ் ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் மாடல் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிறகு ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எதிர்கால கனவுகளின் சொர்க்க மாளிகையாக விளங்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளது.

Rolls-Royce-VISION-NEXT-100-car-1024x512 ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் - எதிர்கால கனவு மாளிகை

 

பிஎம்டபிள்யூ குழமத்தின் கீழ் செயல்படும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய 100 ஆண்டுகள் கழித்து எதிர்காலத்தில் வரவுள்ள மாடலை காட்சிப்படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ளது. பிஎம்டபுள்யூ சில மாதங்களுக்கு முன் தி நெக்ஸ்ட் 100 இயர்ஸ் கான்செப்ட் மாடலை வெளியிட்டது.

103EX என்ற குறியீட்டு பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள  ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் கார் மாடல் எதிர்கால மொபைலிட்டி உலகில் மாபெரும் புரட்சிகரமான கிராண்டான காராக விளங்கும் வகையில் 4 தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளது. அவை

  • The Personal Vision
  • The Effortless Journey
  • The Grand Sanctuary
  • The Grand Arriva

ரோல்ஸ் ராய்ஸ் வடிவ இயக்குநர் கில்ஸ் டெயல்ர் கூறுகையில் அடுத்த 100 ஆண்டுகளில் விஷன் நெக்ஸ்ட் 100  மிக சிறப்பான லிவ்ங் தன்மையை கொண்ட அனுபவத்தினை வழங்கும் வகையில் மிக அழகான ஸ்தலமாக விளங்குவதுடன் மிக பெரிய அளவிலான பிரமாண்டமான ஸ்டைலிங் தோற்றத்தில் விளங்கும்.

Rolls-Royce-VISION-NEXT-100-interior-1024x683 ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் - எதிர்கால கனவு மாளிகை

வெளியிடப்பட்டுள்ள கான்செப்ட் மாடலில் உட்புறத்தில் ஸ்டீயரிங் வீலே இல்லாமல் மிக அகமலான ஓஎல்இடி ஸ்கிரினுடன் மிக அகலமான சோஃபா போன்ற ஒற்றை இருக்கையுடன் நேர்த்தியான மரவேலைப்பாடுகளை கொண்டுள்ள விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்டில் பல நவீன வசதிகளுடன் 28 இன்ச் வீல் மற்றும் 65 அலுமினிய பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டதாக இருக்கும்.

Rolls-Royce-VISION-NEXT-100-idol ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் - எதிர்கால கனவு மாளிகை

Rolls-Royce-VISION-NEXT-100-logo-1024x683 ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் - எதிர்கால கனவு மாளிகை

Rolls-Royce-VISION-NEXT-100-1024x683 ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் - எதிர்கால கனவு மாளிகை

உலகின் சொகுசு கார்களின் ராஜாவாக தற்பொழுது விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் எதிர்காலத்திலும் அந்த நிலையை தக்கவைத்துக்கொள்ளவும் மிக பிரமாண்டமான வசதிகளை கொண்ட காராக 103EX  விளங்கும். மேலும் இது மாசு உமிழ்வினை ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் காராக விளங்கும்.

ரோல்ஸ் ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு

[envira-gallery id="8090"]

 

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin