லம்போ கல்லார்டோ ஸ்குவாட்ரா கார்ஸ்

    லம்போர்கினி கல்லார்டோ ஸ்போர்ட்ஸ் காரை சிறிய ரேஸ் காராக மாற்றி லம்போர்கினி வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

    லம்போ கல்லார்டோ ஸ்குவாட்ரா
    லம்போ சூப்பர் ட்ரோஃபியா பேஸ் காரில் உள்ள 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 570 ஆகும். 6 வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிக எடை குறைவான கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மிகவும் எடை குறைவாக இருக்கும்.
    0-96 கிமீ வேகத்தினை தொட 3.4 நொடிகளை மட்டுமே எடுத்துகொள்கின்றது. லம்போ கல்லார்டோ எல்பி 570-4  ஸ்குவாட்ரா கார்ஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 320கிமீ ஆகும்.

    Comments