லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார் ரூ.41.6 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃப்ரிலேண்டர் எஸ்யூவி காருக்கு மாற்றாக டிஸ்கவரி ஸ்போர்ட் வந்துள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் 4 விதமான வேரியண்டில் இரண்டு விதமான என்ஜின் ஆற்றலை கொண்டுள்ளது. டிஸ்கவரி ஸ்போர்ட் காருடன் மூன்று வருடத்துக்கான சர்வீஸ் பேக் நிரந்தர அம்சமாக உள்ளது.

2.2 லிட்டர் SD4 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் 147பிஎச்பி மற்றும் டாப் வேரியண்டில் 187பிஎச்பி ஆற்றலை தரும். இதில் 9 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

5+2 என்ற இருக்கை ஆப்ஷனில் மொத்தம் S , SE , HSE மற்றும் HSE லக்சூரி என 4 விதமான வேரியண்டில் கிடைக்கும். சிறப்பான ஆஃப் ரோட் அனுபவத்தினை வழங்க வல்ல எஸ்யூவியாக விளங்கும்.

ads

600மிமீ தண்ணீரிலும் மிக எளிதாக பயணிக்க முடியும் வல்லமை கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் சேறு , கல் , சகதி , ஜல்லி , மனல் என எவ்விதமான சாலைகளிலும் பயணிக்க இயலும். மேலும் 7 காற்றுப்பைகள் ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , ஹீல் டீஸன்ட் கன்ட்ரோல் ,டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் , எலக்ட்ரானிக் டிராக்‌ஷன் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது.

மேலும் படிக்க ; லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் வேரியண்ட் விபரம்

8 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , 17 ஸ்பீக்கர்களை கொண்ட பிரிமியம் மெரிடியன் சவூண்ட் சிஸ்டம் , பின்புற இருக்கைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற பல விதமான நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் போட்டியாளர்கள் பிஎம்டபிள்யூ X3 , வால்வோ XC60 மற்றும் ஆடி க்யூ5 போன்றவை ஆகும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை (Ex-showroom, Mumbai)

S (Five seat) : ரூ 46.1 லட்சம்
SE (Five seater): ரூ  51.01 லட்சம்
SE (Seven seater): ரூ  52.50 லட்சம்
HSE (Five seater): ரூ  53.34 லட்சம்
HSE (Seven seater): ரூ  54.83 லட்சம்
HSE Luxury (Five seater): ரூ  60.70 லட்சம்
HSE Luxury (Seven Seater): ரூ  62.18 லட்சம்

Land Rover Discovery Sport Launched in India

Comments