வால்வோ எக்ஸ்சி90 ஹைபிரிட் எஸ்யூவி

வால்வோ எக்ஸ்சி90 டி8 ஹைபிரிட் கார் மிக அதிகப்படியான ஆற்றலாக 400பிஎச்பி வெளிப்படுத்தும்  ஆனால் மிக குறைவான கார்பன் அதாவது  ஒரு கிலோமீட்டருக்கு 59 கிராம் மட்டுமே வெளிப்படுத்தும்.

எக்ஸ்சி90 டி8 காரை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தூய்மையான எஸ்யூவி என வால்வோ அழைக்கின்றது. இதன் காரண்ம் என்னவென்றால் இந்த காரின் உச்சகட்ட ஆற்றல் 400பிஎச்பி ஆகும். மேலும் இதன் குறைவான கார்பன் வெளியிடும் தன்மையே ஆகும்.

Volvo XC90 T8

ஹைபிரிட் கார் என்றால் இரண்டு விதமான ஆற்றலை கொண்டு இயங்கூடிய காராகும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் மின்ஆற்றல் கொண்டு இயங்கும்.

என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்

Ads

2.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு மற்றும் ட்ர்போசார்ஜடு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 318பிஎச்பி மற்றும் டார்க் 400என்எம் ஆகும்.  இதன் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றல் 82பிஎச்பி மற்றும் டார்க் 240என்எம் ஆகும். இவ்விரண்டின் மொத்த ஆற்றல் 400பிஎச்பி ஆகும்.

Volvo XC90 T8 chassis

எக்ஸ்சி90 டி8 கார் ஆல்வீல் டிரைவ் அமைப்புடன் கிடைக்கும். 8 வேக தானியங்கி ஹைபிரிட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 5 விதமான டிரைவ் ஆப்ஷனை கொண்டு நம் விருப்பமான ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

0-100கிமீ வேகத்தினை 5.9விநாடிகளில் எட்டிவிடும்.

Volvo XC90 T8

இதன் குறைவான கார்பன் வெளீயிடு சுற்றுசூழலை பெரிதும் பாதுகாக்க உதவும். பாதுகாப்பான பல அமசங்களை வால்வோ தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நாம் அறிந்தே ஆகும்.

Volvo XC90 T8

Comments