வால்வோ S60 T6 கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் வால்வோ S60 T6 சொகுசு செடான் கார் ரூ.42 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த வால்வோ S60 T6 பெட்ரோல் மாடலில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

volvo%2Bs60%2Bt6 வால்வோ S60 T6 கார் விற்பனைக்கு வந்தது

வால்வோ S60 T6 காரில் 304பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 400என்எம் ஆகும். 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.9 விநாடிகள் மட்டும் எடுத்துக்கொள்ளும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 230கிமீ ஆகும்.

பல நவீன வசதிகளை வால்வோ எஸ்60 டி6 கார் பெற்றுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் சன்ரூஃப் , எலக்ட்ரானிக் கிளைமெட் கன்ட்ரோல் , 7 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் , லெதர் இருக்கைகள் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள் , பக்கவாட்டில் காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி , 50 கிமீ வேகத்திற்க்குள் நகருக்குள் செல்லும் பொழுது தானியங்கி முறையில் தேவைக்கேற்ப பிரேக் இயங்கும்.

வால்வோ S60 T6 கார் விலை – ரூ; 42 லட்சம் ( ex-Showroom, New Delhi )

Volvo S60 T6 launched in India 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin