வால்வோ V40 , XC90 கான்செப்ட் அறிமுகம்

வால்வோ நிறுவனம் வால்வோ V40 மற்றும் XC40 என இரு கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. வால்வோ V40 , XC90 கார்கள் எல்க்ட்ரிக் கார் வேரியண்டிலும் வரவுள்ளது.

Volvo-XC40-front-1024x664 வால்வோ V40 , XC90 கான்செப்ட் அறிமுகம்

40.1 என்ற பெயரில் வால்வோ XC40 க்ராஸ்ஓவர் எஸ்யூவி காரும் , 40.2 என்ற பெயரில் வால்வோ V40 ஹேட்ச்பேக் காரும் உருவாக்கப்பட உள்ளது. வி40 ஹேட்ச்பேக் காரில் பேட்டரி முலம் இயங்கும் எல்க்ட்ரிக் காராக விளங்கும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 350கிமீ வரை பயணிக்க இயலும்.

வெளியிடப்பட்டுள்ள கான்செப்ட் மாடல் ஆனது ஜீலி வால்வோ கூட்டமைப்பில் பிரிமியம் சிறிய கார்களுக்கான சிஎம்ஏ (Compact Modular Architecture) தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் கான்செப்ட் மாடல்களாகும். இந்த கார்களில் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்ததப்பட்டிருக்கும். இதில் 7வேக ஆட்டோ கியர்பாக்சினை பெற்றிருக்கும். இதில் டி5 ட்வின் என்ஜின் பிளக்இன் ஹைபிரிட் இணைக்கப்படிருக்கும்.

Volvo-v40-concept-side-1024x664 வால்வோ V40 , XC90 கான்செப்ட் அறிமுகம்

நவீன டிசைன் தாத்பரியங்களை கொண்டுள்ள வால்வோ V40 , XC40 கார்களில் மிக நேர்த்தியான முகப்பு விளக்குகளுக்கு மத்தியில் தோர் சுத்தி வடிவிலான எல்இடி விளக்கினை பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் XC40 எஸ்யூவி கார் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வி40 அறிமுகம் செய்யப்படும்.

[envira-gallery id="7493"]

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin