விற்பனையில் டாப் 10 எஸ்யூவிகள் – ஜூலை 2015

கடந்த ஜூலை மாதம் விற்பனையான எஸ்யூவி கார்களில் முதல் 10 இடங்களை பிடித்த எஸ்யூவி கார்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். க்ரெட்டா முதலிடத்திலும் எஸ் க்ராஸ் 7வது இடத்திலும் உள்ளது.

எஸ் க்ராஸ்
எஸ் க்ராஸ்

கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு வந்த க்ரெட்டா 32,000த்திற்க்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் சிறப்பான தொடக்கத்தினை எதிர்கொண்டு 6783 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆகஸ்ட் 5ந் தேதி விற்பனைக்கு வந்த எஸ் க்ராஸ் நல்ல தொடக்கத்தினை கண்டுள்ளது. 1510 கார்களை விற்பனை செய்து 7 வது இடத்தினை பெற்றுள்ளது.

டஸ்ட்டர் மற்றும் டெரோனோ (11வது இடத்தில் 645 கார்கள்) போன்ற எஸ்யூவிகள் விற்பனையில் பின் தங்க தொடங்கியுள்ளது. மற்றபடி வழக்கம் போல மஹிந்திரா பொலிரோ , ஸ்கார்ப்பியோ ,  எக்ஸ்யூவி500 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்றவை முன்னிலை வகிக்கின்றது.

பிரிமியம் எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர் 1590 கார்களை விற்பனை செய்து 6வது இடத்தில் உள்ளது. மற்றபடி சான்டா ஃபீ , சிஆர்-வி , பஜீரோ போன்ற எஸ்யூவிகள் 150க்குள் எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

Top 10 SUV Car Sales For July 2015