விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2015

கடந்த ஜூன் மாதம் விற்பனையான கார்களின் விவரப்படி முதல் 10 இடங்களை பிடித்த மாடல்களை கானலாம். மாருதி ஆல்டோ காரை பின்னுக்கு தள்ளி டிசையர் முதலிடத்தினை பிடித்துள்ளது.

maruti swift

மாருதி ஆல்டோ கார் கடந்த ஜூன் மாதத்தில் 21,115 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆனால் மாருதி டிசையர் 751 கார்கள் கூடுதலாக விற்பனை ஆகி 21,866 கார்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

டாப் 10 கார் விற்பனை பட்டியலில் 5 இடங்களை மாருதி பெற்றுள்ளது. ஹூண்டாய் மூன்று இடங்களும் ஹோண்டா இரண்டு இடங்களை பெற்றுள்ளது.

கடந்த மாதம் 10 இடத்தில் இருந்த ஹூண்டாய் எக்ஸ்சென்ட் பின் தங்கியுள்ளது. ஹோண்டா அமேஸ் 9வது இடத்தை பிடித்து சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

Top 10 Selling Cars In June 2015

Comments

loading...