விற்பனை டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2016

2016 ஆம் வருடத்தின் முதல் மாதத்திலே கடந்த சில மாதங்களாக இழந்த இடத்தினை மீண்டும் பெற்று ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்திலும் ஹீரோ ஸ்பிளெண்டர் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.

 விற்பனை டாப் 10 பைக்குகள் - ஜனவரி 2016

டாப் 10 இடங்களில் 5 இடங்களை ஹீரோ பெற்று ஒட்டுமொத்தமாக சந்தையில் முன்னிலை வகிக்கின்றது. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனையில் மூன்றாவது இடத்தினை பிடித்து சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் 1,00,000 பைக்குகளை கடந்துள்ளது.

ஹீரோ பேஸன் மற்றும் கிளாமர் போன்ற பைக்குகளும் வளர்ச்சினை பதிவு செய்துள்ளது. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 53,849 மொபட்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பட்டியலில் இருந்து வந்த சிடி 100 தற்பொழுது வெளியேறியுள்ளது. பஜாஜ் பல்சர் 33,183 பைக்குகள் விற்பனையாகி 10வது இடத்தினை பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆக்டிவா 2,10,123 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ மேஸ்ட்ரோ வரிசை ஸ்கூட்டர்கள் மற்றும் ஜூபிடர் உள்ளது.

top-10-bike-sales-january-2016 விற்பனை டாப் 10 பைக்குகள் - ஜனவரி 2016

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin