வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல்..!

பெட்ரோலிய பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த பரீசிலனை நடைபெறுவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீட்டுக்கே பெட்ரோல் , டீசல்

இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளில் வரிசையில் காத்திருப்பதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் வீட்டுக்கே வந்து நிரப்பும் வகையிலான திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது.

ads

மொபைல் வாயிலாக உணவு பண்டங்களை முன்பதிவு செய்வது போல பெட்ரோலிய பொருட்ளை ஆர்டர் செய்து விட்டால், நுகர்வோர்களின் வீடுகளுக்கே பெட்ரோல் டீசல் கொண்டு வந்து வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்புக்கு, பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் புகார் அளித்தால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.

 

Comments