வென்ட்டோ , போலோ கார்களில் சிறப்பு பதிப்பு அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களில் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் வென்ட்டோ செலஸ்ட் மற்றும் போலோ செலக்ட் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு வெளியாகியுள்ளது.

VW-Vento-Celeste

வரையறுக்கப்பட்ட சிறப்பு பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்களில் தோற்றத்தில் சில மாற்றங்கள் மற்றும் சில கூடுதல் வசதிகள் இன்டிரியரில் பிரிமியம் தோற்ற பொலிவினை கொண்டுள்ளது.

Ads

போலோ செலக்ட்

ஃபோக்ஸ்வேகன் போலோ செலக்ட் மாடலில் மேல்பக்க தோற்றத்தில் கருப்பு நிற பூச்சூ , கருப்பு நிற பாடி மோல்டிங் , கார்பன் பூச்சூ செய்யப்பட்ட ஓஆர்விஎம் போன்றவற்றுடன் உட்புறத்தில் கார்பன் பூச்சூ கொண்ட சென்ட்ரல் கன்சோல் , ஃபோக்ஸ்வேகன் லோகோ பதித்த இருக்கை கவர் , 4 கதவுகளிலும் ஸ்க்ப் பிளேட்  , டரங்க் கார்னிஷ் மற்றும் மிதியடிகளை பெற்றுள்ளது.

VW-Polo-Select

வென்ட்டோ செலஸ்ட் 

போக்ஸ்வேகன் வென்ட்டோ செலஸ்ட்  மாடலில் மேல்பக்க தோற்றத்தில் கருப்பு நிற பூச்சூ , கருப்பு நிற பாடி மோல்டிங் , கார்பன் பூச்சூ செய்யப்பட்ட ஓஆர்விஎம் போன்றவற்றுடன் உட்புறத்தில்  தொடுதிரை அமைப்புடன் கூடிய பிளாபங்கட் ரேடியோ மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் , கார்பன் பூச்சூ கொண்ட சென்ட்ரல் கன்சோல் , ஃபோக்ஸ்வேகன் லோகோ பதித்த இருக்கை கவர் , 4 கதவுகளிலும் ஸ்க்ப் பிளேட்  , பூட் லிப் ஸ்பாய்லர் மற்றும் மிதியடிகளை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விபரம்

வென்ட்டோ ,  போலோ டாப் ஹைலைன் வேரியண்டில் சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதரன மாடலை விட போலோ கார் ரூ.60,000 கூடுதலாகவும் வென்ட்டோ ரூ.75,000 கூடுதலாக இருக்கும்.

Comments