வோக்ஸ்வேகன் வென்ட்டோ பிரீஃபெர்டு எடிஷன் அறிமுகம்

வோக்ஸ்வேகன் வென்ட்டோ பிரீஃபெர்டு சிறப்பு எடிஷன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. நடுத்தர கம்ஃபார்ட்லைன் வேரியன்டில் மட்டுமே கிடைக்க உள்ள சிறப்பு பதிப்பில் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

Volkswagen-Vento-1024x768

 

வென்ட்டோ பிரீஃபெர்டு எடிஷன் மாடலில் எஞ்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் புதிய அலாய் வீல் , கருப்பு மேற்கூறை , பாடி சைடு மோல்டிங் , லெதர் இருக்கை கவர் ,  நேவிகேஷன் , வயர்லெஸ் ரியர் வீயூ கேமரா போன்ற வசதிகளை பெற்று விளங்குகின்றது.

1.6 லிட்டர் MPI, 1.2 லிட்டர் TSI, 1.5 லிட்டர் TDI மற்றும் 1.5 லிட்டர் TDI DSG என அனைத்து இஞ்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விலை  விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.சாதரன மாடலை விட ரூ.40,000 வரை கூடுதலாக இருக்கலாம்.

2015-Volkswagen-Vento-Interior-1024x679

 

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட வென்ட்டோ அதிக ஆற்றலை வழங்கும் 110 hp 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலை போக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வென்ட்டோ டீசல் முழுவிபரம்

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin