ஸ்கோடா ரேபிட் லீசர் அறிமுகம்

  ஸ்கோடா ரேபிட்  காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பு ரேபிட் லீசர் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ரேபிட் லீசர் கிடைக்கும்.

  ஸ்கோடா ரேபிட் லீசர்

  ரேபீட் லீசர் காரில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நேவிகேஷன் அமைப்பு, ரீயர் பார்க்கீங் சென்சார், 15 இன்ச் ஆலாய்வீல், லெதர் இருக்கை கவர்கள், மற்றும் சிறப்பு பதிப்பு என்ற முத்திரை பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.

  ஸ்கோடா ரேபிட் லீசர் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜினில் 6 வேக ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.டீசல் என்ஜினில்5வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  ஸ்கோடா ரேபீட் லீசர் 9.06 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

  Comments