ஸ்பிளென்டர் Vs பிளாட்டினா Vs ஸ்டார் சிட்டி ப்ளஸ் Vs செஞ்சூரோ – Auto Tamil Q&A

  தொடக்க நிலை பைக் மாடல்களான ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்,  பிளாட்டினா Es , ஸ்டார் சிட்டி ப்ளஸ் மற்றும் செஞ்சூரோ இந்த நான்கு பைக்கில் எந்த பைக் வாங்கலாம் என்ற கேள்விக்கு Auto Tamil Q&A பகுதியில் பார்க்கலாம்.

  Auto Tamil Q&A

  ஆட்டோமொபைல் தமிழன் வாசகர் நண்பர் கோபால் கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு பதிலை தரும் வகையில் இந்த செய்தி தொகுப்பு

  அவருடைய கேள்வி

  Auto Tamil Q&A

  தோற்றம்

  ads

  ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் நேர்த்தியான வடிவமைப்பில் ஸ்டைலான அட்வான்ஸ் பாடி கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. இந்த பைக்கில் மொத்தம் 4 வண்ணங்கள் உள்ளன. அவை சிவப்பு , பச்சை , நீலம் மற்றும் கிரே ஆகும்.

  பஜாஜ் பிளாட்டினா Es
  பஜாஜ் பிளாட்டினா Es

  பஜாஜ் பிளாட்டினா Es பைக்கில் சிறப்பான கிராஃபிக்ஸ் கொண்டுள்ள இந்த பைக்கில் மூன்று நிறங்கள் உள்ளன. அவை கருப்பு , சிவப்பு மற்றும் நீலம் ஆகும்.

  டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் நல்ல வடிவமைப்புடன் சிறப்பான டிசைன் கொண்ட இந்த பைக் மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது. அவை சிவப்பு , நீலம் மற்றும் கருப்பு ஆகும்.

  மஹிந்திரா செஞ்சுரோ ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை வெளிப்படுத்தக்கடிய இந்த பைக்கில் 3 கலர்கள் உள்ளது. அவை சில்வர் , சிவப்பு மற்றும் கருப்பு ஆகும்.

  டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
  டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

  என்ஜின்

  ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் , பஜாஜ் பிளாட்டினா Es , என இரண்டு பைக்கிலும் 100சிசி என்ஜினும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி மற்றும்  மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் 110சிசி என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

  மேலும் வாசிக்க ; ஹோண்டா லிவோ பைக் விபரம்

  ஆனால் இந்த நான்கு பைக்கின் என்ஜின் ஆற்றல் மற்றும் முறுக்குவிசை செயல்பாடு சமமாகத்தான் இருக்கின்றது

  அதன் விபரங்கள்

  மைலேஜ்

  உலகின் மிக அதிக மைலேஜ் தரக்கூடிய பெயருக்கு சொந்தமான பைக்காக ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் விளங்குகின்றது. அதனை தொடர்ந்து பஜாஜ் பிளாட்டினா இஎஸ் , ஸ்டார் சிட்டி மற்றும் செஞ்சூரோ  என வரிசையாக உள்ளது.

  ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்
  ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 

  பிரேக்

  ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கில் முன் மற்றும் பின் பக்கங்களில் டிரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர்.

  பிளாட்டினா பைக்கில் முன் மற்றும் பின் பக்கங்களில் டிரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர்.

  டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் முன் மற்றும் பின் பக்கங்களில் டிரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர்.

  மஹிந்திரா செஞ்சூரோ  முன் மற்றும் பின் பக்கங்களில் டிரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். மேலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் உள்ளது.

  சிறப்பம்சங்கள்

  சிறப்பான வசதிகள் என்றால் முந்திக்கொண்டு வருவது மஹிந்திரா செஞ்சூரோ பைக்தான். இந்த பைக்கில் ஃபாலோ மீ விளக்கு, திருட்டினை தடுக்க வல்ல என்ஜின் இம்மொபைல்சர் , ஃபிளிப் கீ , இருட்டில் பைக் நின்றால் கண்டுபிடிக்க உதவும் ஃபைன்ட் மீ விளக்கு மற்றும் சர்வீஸ் நினைவூட்டல் என பல வசதிகளை பெற்றுள்ளது.

  மஹிந்திரா செஞ்சூரோ
  மஹிந்திரா செஞ்சூரோ

  அதனை தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் பைக்கில் i3S என்ற நுட்பம் உள்ளது. இந்த நுட்பமானது சிறப்பான மைலேஜ் தர மிக பெரும் உதவியாக உள்ளது.

  மேலும் வாசிக்க ; யமஹா சல்யூடோ பைக்

  விலை விபரம் (All Prices Ex-Showroom Chennai)

  ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் விலை

  Self Start Drum Alloy wheel — ரூ.52,008
  Self Start Drum Spoke wheel — ரூ.50,991

  பஜாஜ் பிளாட்டினா

  பிளாட்டினா Es – ரூ.45,804

  பிளாட்டினா Ks – ரூ.42,241

  டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

  ஸ்டார் சிட்டி ப்ளஸ் கிக் ஸ்டார்ட் – ரூ.44,929

  ஸ்டார் சிட்டி ப்ளஸ் செல்ஃப் ஸ்டார்ட் – ரூ.47,560

  மஹிந்திரா செஞ்சூரோ

  செஞ்சூரோ ராக்ஸ்டார் கிக் – ரூ.43,410

  செஞ்சூரோ ராக்ஸ்டார் – ரூ.45,710

  செஞ்சூரோ XT – ரூ.48,610

  செஞ்சூரோ NXT – ரூ.51,510

  செஞ்சூரோ டிஸ்க் – ரூ.51,710

  ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை

  சிறப்பான மைலேஜ் மற்றும் நம்பிக்கை போன்றவற்றில் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மர்ட் முன்னிலை வகிக்கின்றது. அதனை தொடர்ந்து பஜாஜ் பிளாட்டினா Es உள்ளது. ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் மிக தரமான பைக் என்பதில் மாற்று கருத்தில்லை. நவீன வசதிகள் ஸ்போர்டிவான யூத் லுக் என்பதில் மஹிந்திரா செஞ்சூரோ முன்னிலை வகிக்கின்றது.

  நம் பரிந்துரை ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் ஆகும்.

  உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி ; [email protected]

  Comments