ஹயோசங் GT300R & GV300 பைக்குகள் அறிமுகம் – EICMA 2015

இந்திய வரவுள்ள ஹயோசங் GT300R சூப்பர் ஸ்போர்ட் மற்றும் GV300 க்ரூஸர் பைக்குகள் இத்தாலியின் EICMA 2015 பைக் கண்காட்சியில் ஹயோசங் அறிமுகம் செய்துள்ளது.

2016-Hyosung-GT300R-Motorcycle ஹயோசங் GT300R & GV300 பைக்குகள் அறிமுகம் - EICMA 2015

ஹயோசங் GT300R

விற்பனையில் உள்ள ஹயோசங் GT250R பைக் மாடலுக்கு மாற்றாக வரவுள்ள ஹயோசங் GT300R பைக்கில் ஜிடி250ஆர் பைக்ககின் தாத்பரியங்கள் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிடி250ஆர் மாடலை விட என்ஜின் மற்றும் தோற்றம் போன்றவற்றில் மாற்றம் கண்டுள்ள ஹயோசங் ஜிடி300ஆர் பைக்கில் இரட்டை பிரிவு முகப்பு விளக்கு , ஸ்பிளிட் இருக்கைகள் , 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.

27.6பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 275சிசி 8 வால்வுகளை கொண்ட வி-ட்வீன் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 23.5என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க்கும் பெற்றுள்ளது. ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக உள்ளது. அடுத்த வருடம் இந்திய சந்தைக்கு வரவுள்ள ஹயோசங் GT300R பைக்கின் விலை ரூ.4 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

2016-Hyosung-GT300R-Motorcycle-rear ஹயோசங் GT300R & GV300 பைக்குகள் அறிமுகம் - EICMA 2015

ஹயோசங் GV300

விற்பனையில் உள்ள அக்குய்லா 250 மாடலுக்கு மாற்றாக வந்துள்ள ஹயோசங் GV300 க்ருஸர் பைக்கில் தோற்ற மாற்றங்களுடன் நேரத்தியாக அமைந்துள்ளது.

2016-Hyosung-GV300-Cruiser ஹயோசங் GT300R & GV300 பைக்குகள் அறிமுகம் - EICMA 2015

ஹயோசங் GV300 பைக்கில் 26பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 275சிசி 8 வால்வுகளை கொண்ட வி-ட்வீன் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 23.5என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

குரோம் பூச்சூகளை பெற்றுள்ள ஹயோசங் ஜிவி300 பைக்கில் ஸ்போர்ட்டிவான பெட்ரோல் டேங்க் , ஸ்பிளிடெஃ இருக்கைகள் , வட்ட வடிவ முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது.

ஹயோசங் GV300 பைக் விலை ரூ.3.50 லட்சத்திற்க்குள் இருக்கலாம். இந்தியாவிற்க்கு அடுத்த ஆண்டு மத்தியில் வரவுள்ளது.

Hyosung GT300R & GV300 Unveiled At EICMA 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin