ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் அறிமுகம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் பற்றி முக்கிய விபரங்கள் மற்றும் ஹிமாலயன் பைக் படங்கள் , வீடியோ போன்றவற்றை ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது.

Royal-Enfield-Himalayan-side-view ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் அறிமுகம்

வரும் பிப்ரவரி 2ந் தேதி நடைபெறுகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் முறைப்படி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் ஆர்இ நிறுவனம் சில முக்கிய தகவல்கள் மற்றும் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஹிமாலயன் பைக்கில் 29Bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 400CC  ஆயில் கூல்டு என்ஜின் LS400 பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 40Nm ஆக இருக்கும்.

ஆன் ரோடு மற்றும் ஆஃப்ரோடு என இரண்டிலும் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்துக்கூடிய மாடலாக விளங்கவுள்ள ஹிமாலயன் பைக்கின் சர்வீஸ் முறை 10,000 கிமீ மற்றும் ஸ்பார்க் பிளக் மாற்றும் முறை 25,000 கிமீ ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவாலான விலை மட்டுமல்லாமல் சிறப்பான எரிபொருள் சிக்கனம் , பெர்ஃபாமென்ஸ் , ஓட்டுதல் அனுபவம் போன்றவற்றுடன் நல்ல உயரமான பைக்காக  விளங்குகின்றது.

ஆஃப் ரோடு சாலைகளில் தங்குதடையின்றி பயணிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள 21 இஞ்ச் ஸ்போக்குகளை கொண்ட வீல் மிக சிறப்பான நிலைப்பு தன்மையுடன் விளங்கும். சிறப்பான தொலைதூர பயணத்திற்கு ஏற்ற மாடலாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹிமாலயன் பைக்கில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்லு வகையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Royal-Enfield-Himalayan-testing1 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் அறிமுகம்

எந்த சாலை என வரையறுக்குப்படாமல் எங்கும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் நிச்சியமாக ராயல் என்ஃபீலடு நிறுவன வரலாற்றில் முக்கிய பங்கு விகிக்கும். வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களை தவிர கூடுதலாக மற்றொரு வண்ணத்திலும் வரவுள்ளது.

நேரடியான போட்டியாளர்கள் இல்லாத அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் வரும் ஹிமாலயன் பைக் சிறப்பான வெற்றியை பெறும் வாய்ப்புகள் உள்ளது.  ஹிமாலயன் பைக்கின் விலை ரூ. 1.75 முதல் ரூ.2.00 லட்சத்திற்குள் எக்ஸ்ஷோரூம் விலை இருக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு

[envira-gallery id=”5636″]

 

loading...
82 Shares
Share81
Tweet
+11
Pin