ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் ஸ்பை படங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் புதிய சோதனை ஓட்ட படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஹிமாலயன் பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

Royal-Enfield-Himalayan-production-spied

இரண்டு விதான வேரியண்டில் ஹிமாலயன் பைக் வரவுள்ளது . அவை அட்வென்ச்சர் மற்றும் ஸ்டீரிட் ஆகும். உற்பத்தி நிலை எட்டியுள்ள ஹிமாலயன் பைக்கில் 410சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

அட்வென்ச்சர் வகை ஹிமாலயன் பைக்கின் படங்கள் தற்பொழு வெளிவந்துள்ளது. இதில் மிக உயரமான ஃபென்டர் , வட்ட வடிவ முகப்பு விளக்கில் வின்ஷீல்டு கிளாஸ் , என்ஜின் கார்டு மற்றும் இருபுறங்களில் மிகப்பெரிய லக்கேஜ் பாக்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது.

28பிஎஸ் ஆற்றலை வழங்கும் 410சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் இதில் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்க்கு உரித்தான சத்தம் இந்த பைக்கில் இல்லை எனவும் கூறப்படுகின்றது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் மக்களின் பார்வைக்கு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் வரவுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விலை ரூ.1.75 லட்சத்தில் தொடங்கலாம். ஹிமாலயன் பைக் புதிய பிரிவில் வருகின்றது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்

Comments

loading...