ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக் எப்பொழுது ?

ஹீரோ மற்றும் இபிஆர் கூட்டணியில் உருவாக வரும் ஹீரோ HX250R ஸ்போர்ட்டிவ் பைக் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக்கில் 31பிஎச்பி ஆற்றலை வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

ஹீரோ HX250R

ஹீரோ HX250R பைக்கில் 31பிஎச்பி ஆற்றலை வழங்கும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். கடந்த 2014 ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வந்த எச்எக்ஸ்250ஆர் தற்பொழுது சோதனை ஓட்டங்களில் உள்ளது.

ஸ்போர்ட்டிவ் சந்தையில் தனது முதல் நுழைவாக HX250R அமைய உள்ளது. முன் மற்றும் பின்புறத்திலும் பேடல் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக் பெற்றிருக்கும்.

ஹீரோ HX250R பைக்கின் போட்டியாளர்களாக  காவாஸகி Z250, ஹோண்டா CBR 250R மற்றும் கேடிஎம் RC 390 போன்ற பைக்குகள் விளங்கும். ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக்கின் விலை ரூ.1.50 லட்சம் இருக்கலாம் . வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முன்பாக விற்பனைக்கு வரலாம்.

ஹீரோ HX250R
Hero HX250R Spied In India

Comments

loading...