ஹீரோ எலக்ட்ரிக் NYX ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஹீரோ எலக்ட்ரிக் NYX என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் ரூ.29,900 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாளில் இருந்து டெலிவரி தொடங்கப்படும்.

Hero-Electric-NYX-Front

NYX எலக்ட்ரிக்  ஸ்கூட்டர் பேடிஎம் ஆன்லைன் இணையதளத்தின் வழியாக முதற்கட்டமாக 15 நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற நகரங்களில் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ads

அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் பயணிக்க கூடிய  NYX ஸ்கூட்டரில் 250W மோட்டார் மூலம் இயங்கும் வகையில்  48V/24AH பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக 75 கிமீ வரை பயணிக்க இயலும். திருட்டினை தடுக்கும் அலாரம் , 20 முதல் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் , 10 இஞ்ச் வீலினை பெற்றுள்ளது.

 

Hero-Electric-NYX-side

 

NYX எலக்ட்ரிக்  ஸ்கூட்டர் பயன்படுத்த எவ்விதமான ஓட்டுநர் உரிமம் தேவை இல்லை.  முதற்கட்டமாக 1000 ஸ்கூட்டர்களை அடுத்த இரண்டு வாரங்களில் விற்பனை செய்ய இலக்கினை ஹீரோ எலக்ட்ரிக் நிர்னைத்துள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் NYX மின்சார ஸ்கூட்டர் விலை ரூ.29,990 (ஆன்ரோடு இந்தியா)

Comments