ஹீரோ ஸ்பிளெண்டர் 110 ஐஸ்மார்ட் பைக் விரைவில்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஸ்பிளெண்டர் 110சிசி ஐஸ்மார்ட் பைக் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் 110 ஐஸ்மார்ட் பைக் ஹீரோ நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும்.

hero-splendor-ismart-110-auto-expo-2016

loading...

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வந்த ஹீரோ ஸ்பிளெண்டர் 110சிசி ஐஸ்மார்ட் பைக் ஹீரோ நிறவனத்தின் டிசைன் தாத்பரியங்கள் மற்றும் புதிய ஹீரோ என்ஜினை கொண்டு வடிவமைக்கபட்ட மாடலாகும். ஹீரோ நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளான மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்கள் அமோக வரவேற்பினை பெற்றது.

hero-splendor-ismart-110-features

110 ஐஸ்மார்ட்

9.1 PS @7500 rpm ஆற்றல் மற்றும் 9Nm @ 5500 rpm டார்க் வழங்கும் 109.15cc ஏர் கூல்டு 4 ஸ்டோர்க் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக் வேகம் மணிக்கு 87 கிமீ ஆகும். இந்த பைக்கில் ஹீரோ நிறுவனத்தின் i3S (Idle Stop and Start System ) நுட்பத்தினை பயன்படுத்தி சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என குறிப்பிட்டுள்ளது. மைலேஜ் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த பைக்கின் டேக்லைன் Fill it, shut it and forget it ஆகும். எதிர்பார்க்கப்படும் கம்பெனி மைலேஜ் 88 கிமீ முதல் 92 கிமீ ஆகும்.

அடுத்த சில வாரங்களில் ஜூலை முதல் வாரத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் பைக் விலை ரூ.59,000 இருக்கலாம்.

loading...
10 Shares
Share10
Tweet
+1
Pin