ஹீரோ HX250R ஸ்போர்ட்ஸ் பைக் எப்பொழுது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அமெரிக்காவின் இபிஆர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வரும் HX250R ஸ்போர்ட்ஸ் பைக் ஆனது இபிஆர் நிறுவனம் திவாலானதால் சற்று தள்ளி போனது.

hero-hx250r-front

இபிஆர் திவாலுக்கு பின்னர் சில முக்கிய சொத்துகளை தன்வசம் எடுத்துக்கொண்ட ஹீரோ மோட்டோகார்ப் எச்எக்ஸ்250 ஆர் பைக்கின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையை இந்தியாவிலே செயல்படுத்த உள்ளது.

loading...

சியாம் (Society of Indian Automobile Manufacturers -SIAM) பொது கூட்டத்தில் பங்கேற்ற ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சால் கூறுகையில் இபிஆர் நிறுவனத்தின் திவாலுக்குபின்னர் சில சட்ட சிக்கல்கள் இருந்தாலும் புதிய மோட்டார்சைக்கிள் உற்பத்தி பாதிக்காத வண்ணம் இந்தியாவிலே இதற்க்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதால் விரைவில் புதிய பைக்குகள் வெளிவரும். மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஜெய்ப்பூர் மையம் வரும் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பட உள்ளது.

மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையை குறிவைத்து இன்னும் சில வாரங்களில் இரண்டு ஸ்கூட்டர்கள் (மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட்) விற்பனைக்கு வரவுள்ளது.

தீவர சோதனை ஓட்டத்தில் உள்ள ஹீரோ HX250R ஸ்போர்ட்ஸ் பைக் 2016 டெல்லி ஆட்டோ எக்‌ஸ்போ கண்காட்சியை தொடர்ந்து விற்பனைக்கு வரலாம்.

Hero R&D Shifting From US To India

loading...