ஹூண்டாய் ஐ20 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை 10 இலட்சம் எண்ணிக்கையை சர்வதேச அளவில் கடந்துள்ளதாக ஹூண்டாய் செய்தி வெளியிட்டுள்ளது.

hyundai-elite-i20 ஹூண்டாய் ஐ20 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

2008 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஐ20 ,2012 ஆம் ஆண்டு வெளிவந்த மேம்படுத்தப்பட்ட ஐ20 , 2014 ஆம் ஆண்டு வெளிவந்த எலைட் ஐ20 மற்றும் 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஐ20 ஏக்டிவ் க்ராஸ்ஓவர் ஆகிய மாடல்களின் ஒட்டுமொத்த கூட்டு விற்பனை எண்ணிக்கை 1 மில்லியன் இலக்கினை கடந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ20 கார்கள் இந்திய மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பிரிவின் நிர்வாகி மற்றும் தலைமை செயல் அதிகாரி Y K. KOO கூறுகையில் வரலாற்று முக்கியத்துவமான விற்பனை சாதனையை பெற்றுள்ள ஐ20 மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்போர்ட்டிவ் தோற்ற அமைப்பினை கொண்ட முன்னனி வாகனமாக விளங்குகின்றது.  ஐ20 இந்திய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பினை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி பலெனோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 சந்தையை பகிர்ந்துகொள்கின்றது.

Hyundai-i20-Active-silver ஹூண்டாய் ஐ20 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin