ஹூண்டாய் கிராண்ட் ஐ10 எப்பொழுது

ஹூண்டாய் நிறுவனம் ஐ10 மற்றும் ஐ20 காருக்கு இடையிலான காரினை சோதனை செய்து வந்தது. தற்பொழுது அந்த காருக்கான பெயர் மற்றும் படங்களை வெளியிட்டுள்ளது. 

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என பெயரிடப்பட்டுள்ள இந்த காரனது வருகிற செப்டம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கிராண்ட் ஐ10 பெட்ரோல் காரின்  விலை ரூ.4 லட்சம் மற்றும் டீசல் காரின் விலை ரூ.5 லட்சத்தில் தொடங்கலாம்.
புதிய 1.1 லிட்டர் 3சிலிண்டர் கொண்ட  டீசல் என்ஜின் பொருத்த வாய்ப்புள்ளது.  இந்த என்ஜின் 70எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும் ஐ10 காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் கப்பா என்ஜின் பொருத்தப்படலாம்.
Hyundai’s Grand i10

Comments