ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி விலை

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி கார் விலை ரூ.9 முதல் 12.4 லட்சத்திலான விலையில் மொத்தம் 6 விதமான வேரியண்டிலும் க்ரெட்டா எஸ்யுவி ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி

க்ரெட்டா எஸ்யுவி பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் தலா மூன்று வேரியண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.  அவை S , SX மற்றும் SX (O) ஆகும்.

க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யுவி சான்டா ஃபீ எஸ்யுவி காரின் சிறிய ரக மாடலாக காட்சியளிக்கின்றது. நல்ல தாரளமான இடவசதி கொண்டிருக்கும் . எலைட் ஐ 20 காரில் உள்ள பலவசதிகளை க்ரெட்டா காரிலும் புகுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி
Ads

கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் , பகல் நேர எல்இடி விளக்குகள் , பூளூடூத் தொடர்பு ,ரிவர்ஸ் கேமரா , தானாக ஃபோல்டிங் ஆகும் மிரர்கள் , இரட்டை காற்றுப்பைகள் , பக்கவாட்டிலும் மற்றும் கர்டைன் காற்றுப்பைகள் , மலையேற இறங்க உதவும் அமைப்பு  என பல நவீன அம்சங்களை கொண்டிருக்கும்.

க்ரெட்டா என்ஜின் விபரம்

1.6 லிட்டர் VTVT பெட்ரோல் என்ஜின் 121பிஎச்பி ஆற்றலை அளிக்கும் முறுக்குவிசை 155என்எம் ஆகும்.

1.6 லிட்டர் CRDi டீசல் என்ஜின் 126பிஎச்பி ஆற்றலை அளிக்கும் முறுக்குவிசை 260என்எம் ஆகும்.

மெனுவல் மற்றும் தானியங்கி (டீசல்) என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் முதலில் க்ரெட்டா காரில்தான் தானியங்கி கியர்பாக்சில் வருகின்றது.

creta features

வேரியண்ட் விபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் S பேஸ் வேரியண்டில் ஹாலஜென் விளக்குகள் , ஃபோல்டபள் கீ , கியர் சிஃப்ட் இன்டிகேட்டர் , என்ஜின் இம்மொபைல்சர் மற்றும் 2 டின் ஆடியோ அமைப்பு உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் SX வேரியண்டில் S வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் , பூளூடூத் தொடர்பு , ஏபிஎஸ் , இரண்டு காற்றுப்பைகள் ,ஆலாய் வீல் , ஓட்டுநர் இருக்கை உயரத்தினை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ,ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் உள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் SX (O) வேரியண்டில் SX வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் , பகல் நேர எல்இடி விளக்குகள் , ரிவர்ஸ் கேமரா , தொடுதிரை அமைப்பு , 17 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் போன்றவை உள்ளது

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி

க்ரெட்டா எஸ்யுவி விலை விபரம்

பெட்ரோல்

க்ரெட்டா 1.6-litre VTVT S : ரூ 9 லட்சம்
க்ரெட்டா 1.6-litre VTVT SX : ரூ 9.9 லட்சம்
க்ரெட்டா 1.6-litre VTVT SX (O) : ரூ 10.7 லட்சம்

டீசல்

க்ரெட்டா1.6-litre CRDi S : ரூ 10.5 லட்சம்
க்ரெட்டா1.6-litre CRDi SX : ரூ 11.6 லட்சம்
க்ரெட்டா 1.6-litre CRDi SX (O) : ரூ 12.4 லட்சம்

Hyundai Creta SUV Price and variant details

Comments