ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி உற்பத்தி மேலும் அதிகரிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் அமோகமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. கடந்த ஆகஸ்டு மாதம் 7473 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு வந்த க்ரெட்டா எஸ்யூவி மிக சிறப்பான வரவேற்பினை பெற்று ஜூலை மாதம் 6783 கார்களை விற்பனை செய்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்டு  மாதம் 7473 கார்களை விற்பனை ஆகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில் மாதம் 5000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. தற்பொழுது அதனை மேலும் அதிகரித்து 7000 கார்களாக உற்பத்தி செய்ய உள்ளது.

மேலும் படிக்க ; ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி முழுவிபரம்

முதன்முறையாக க்ரெட்டா எஸ்யூவி விற்பனையால் கடந்த ஆகஸ்ட் மாதம் 40,505 மொத்தமாக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை உற்பத்தி செய்யப்படும் கார்களை ஹூண்டாய் க்ரெட்டா விற்பனை செய்துள்ளதாம்.

Hyundai India increases creta production