ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி கார் வரும் ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் க்ரெட்டா எஸ்யூவி காருக்கு சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

சீனாவில் iX25 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்ரெட்டா எஸ்யூவி இந்தியா மற்றும் உலகநாடுகளில் க்ரெட்டா என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டது.

சிறிய ரக எஸ்யூவி காராக விளங்கும் க்ரெட்டா காருக்கு ரூ.40,000 முதல் 50,000 வரை முன்பதிவு தொகையாக வசூலிக்கப்படுகின்றது.  பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்சில் க்ரெட்டா எஸ்யூவி வரவுள்ளது. பெட்ரோல் மாடல் தாமதமாக விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி டஸ்ட்டர் , டெரானோ ,மற்றும் வரவிருக்கும் எஸ்-கிராஸ் போன்ற காருக்கு போட்டியாக விளங்கும்.

Hyundai Creta SUV Bookings begin

Comments

loading...