ஹெல்மெட் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை என்ன ?

புதிய ஹெல்மெட் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன ?  ஹெல்மெட்டில் என்ன விதமான சோதனைகள் மற்றும் ஹெல்மெட் எவ்வாறு இருக்க வேண்டும் என அறிந்து கொள்ளலாம்.

loading...
helmet
பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க சாலையோர கடைகளை கூட பலரும் பயன்படுத்துகிறோம். இதற்க்கு காரணம் தலைக்கவசம் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஹெல்மெட்  வாங்கலாமா

 •  உங்கள் தலையினை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை மட்டும் வாங்குங்கள்.
 • கண்டிப்பாக தலைக்கவசம் (Helmet) சரியாக பொருந்தியிருக்க (அதாவது உங்கள் தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த வேண்டும்) வேண்டும்.எக்காரணம் கொண்டும் சரியாக பொருந்தாத மற்றும் சிறப்பான வசதிகள் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக் கூடாது.
 • உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவற்றில் எவ்விதமான உறுத்தல்களும் இல்லாமல் உங்களுக்கு இதமான சூழ்நிலை தரும் வகையில் தேர்வு செய்தால் உங்கள் பயணத்தின் பொழுது எவ்விதமான சிரமங்கள் இல்லாமல் இயல்பாக இருக்க பெரிதும் உதவிகரமானதாக அமையும்.
helmet
 • எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக் கூடாது.
 • உங்கள் ஸ்ட்ராப்யில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருந்தால் போதுமானது.
 • உங்கள் ஸ்ட்ராப் உங்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சட்டென்று ஏற்படும் நிகழ்வுகளின் பொழுது உங்கள் தலைக்கவசம் தலையை விட்டு வெளியேறாது.
 • ஹெல்மெட்டின் (வைசர்) முன்புற கண்ணாடியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன அவற்றில் பூச்சு செய்யப்பட்ட கண்ணாடிகள் அழகை கூட்டினாலும் அவை இரவு மற்றும் வெளிச்சம் குறைந்த வேளைகளில் சிறப்பான காட்சியினை பெறுவதில் தடுமாற்றம் ஏற்படலாம்.
 • முன்புற கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான கீறல்கள் மற்றும் உடைந்தாலும் கண்ணாடியினை மாற்றுங்கள்.
 • உங்கள் தலைக்கவசம் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கூடியதாக இருத்தல் அவசியம். மேலும் மிக கடினமான மேற்புற ஓடு அமைந்திருத்தல் அவசியம்.

தலைக்கவசம் தர முத்திரை அவசியம்

 • இந்தியாவின் ஐஎஸ்ஐ (ISI) அல்லது DOT(U.S. Department of Transportation) முத்திரை இருக்க வேண்டும்.
 • மேலும் தர முத்திரை உண்மையானதா என்பதனை www.bis.org.in தளத்தில் சோதனை செய்யுங்கள்.
ஆன்லைனில் தரமான மற்றும் விலை சலுகையுடன் ஹெல்மெட் வாங்க – க்ளிக் பன்னுங்க
loading...