ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்

ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் மோட்டார்சைக்கிளில் டாப் வேரியண்ட் மாடலே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கில் 6 வேக டிசிடி ஆட்டோ பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

Honda-Africa-Twin-1024x767 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்

ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன்

 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைக்கு வரவுள்ள ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் 1000சிசி அட்வென்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கில் சர்வதேச அளவில் 998சிசி இஞ்ஜின் பெற்று 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Honda-Africa-Twin-engine-1024x768 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்

94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி லிக்யூடு கூல் பேரலல் ட்வீன் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 98 Nm ஆகும். இதில் 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்ரக வேரியன்ட் மாடலான ஆட்டோ பாக்ஸ் மட்டுமே இடம்பெறலாம்.

 

அட்வென்ச்சர் டூரர் ஆப்பிரிக்கா ட்வீன் ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளில் அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் ஸ்டாண்டர்டு ஹோண்டா செலக்டெபிள் டார்க் கன்ட்ரோல் ( standard Honda Selectable Torque Control – HSTC ) இடம்பெற்றிருக்கும். முன்பக்க டயரில் 310மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்  மற்றும் பின்பக்க டயரில் 256 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 9 இன்ச் வரை பயணிக்ககூடிய அப்-சைட் டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் 8.7 இன்ச் பயணிக்ககூடிய  அட்ஜெஸ்டபிள் ரியர் மோனோஷாக் அப்சார்பரினை பெற்று விளங்குவதனால் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெறலாம்.

Honda-Africa-Twin-cluster-1024x767 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்

பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலே ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதால் சவாலான விலையில் ரூபாய் 15 லட்சம் முதல் 17 லட்சம் வரையிலான விலைக்குள் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

honda-CRF1000L-Africa-Twin-1024x767 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்

Honda-Africa-Twin-rear-1024x643 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் வருகை விபரம்

loading...
1 Shares
Share
Tweet
+11
Pin