ஹோண்டா கார்களுக்கு 7 வருட காலம் நீட்டிக்கப்பட்ட வாரண்டி

ஹோண்டா கார் நிறுவனம் தனது மாடல்களுக்கு 7 வருட காலம் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வழங்குகின்றது. இதன் மூலம் எந்த நேரமும் வாரண்டியை ஹோண்டா கார்களுக்கு பெறலாம்.

ஹோண்டா அமேஸ் கார்

தற்பொழுது விற்பனையில் உள்ள அமேஸ் , பிரியோ , சிட்டி , மொபிலியோ, சிஆர்வி எஸ்யூவி கார்களுக்கும் அக்கார்டு , சிவிக்  மற்றும் ஜாஸ் போன்ற விற்பனை நிறுத்தப்பட்ட மாடல்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

Any Time Warranty  என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் கார் விற்பனை செய்யப்பட்ட 7 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் க்குள் ஓடியுள்ள கார்களுக்கு வாரண்டி பெற முடியும். பழைய ஹோண்டா கார்களை வாங்கிய உரிமையாளர்களுக்கும் பொருந்தும்.
வாரண்டி காலத்தில் உள்ள வாகனங்களில் வரையறுக்கப்பட்ட பாகங்களை முழுமையாக மாற்றவோ அல்லது பழுது நீக்கவோ மேலும் பழுது நீக்கும் செலவு போன்றவை இந்த வாரண்டி திட்டத்தின் மூலம் பெற முடியும்.

முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் ஹோண்டா வாகனத்துடன் அருகிலுள்ள டீலரை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments