ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 அறிமுகம் ரூ- 69,350

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி யூனிகார்ன் 160 பைக்கினை ரூ.69,350 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய யூனிகார்ன் டிரிக்கர் பைக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

யூனிகார்ன் 160 பைக்கினை மிகவும் நேர்த்தியான ஸ்போர்டிவான அமைப்புடன உருவாக்கியுள்ளனர்.மிகவும் கவர்ச்சிகரமான இன்ஸ்டுரூமென்டல் பேனல் பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி யூனிகார்ன்

புதிய யூனிகார்ன் மிகவும் சக்திவாய்ந்த 160சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14.5பிஎச்பி மற்றும் டார்க் 14.61 ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 106 கிமீ ஆகும்.

எச்இடி நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள யூனிகார்ன் என்ஜின் லிட்டருக்கு 62கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

Ads

யூனிகார்ன் 160 பைக்கில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும் பின்புறத்தில் மோனோசாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை வெள்ளை, கருப்பு, கிரே மற்றும் சிகப்பு ஆகும்.

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 விலை(ex-showroom delhi)

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160- ரூ.69,350 ( standard)

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 – ரூ, 74,414  (CBS-Combi-Brake System)

Comments