ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் கூடுதல் வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் காரில் புதிய வசதிகளை இணைத்ததுள்ளனர். ஃபோக்ஸ்வேகன் போலோ டாப் வேரியண்டில் மட்டும் கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

தனது போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் நவீன வசதிகளை இணைத்துள்ளது. குறிப்பாக க்ரூஸ் கட்டுப்பாடு மற்றும் கூல்டூ குளோவ் பாக்ஸ் போன்றவை உள்ளது.

ஹைலைன் போலோ வேரியண்டில் க்ரூஸ் கட்டுப்பாடு , எலக்ட்ரிக் ஃபோல்டிங் விங் மிரர் மற்றும் கூல்டூ குளோவ் பாக்ஸ் வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
கம்ஃபோர்ட்லைன் மற்றும் டிரென்ட்லைன் வேரியண்டில் எலக்ட்ரிக் ஃபோல்டிங் விங் மிரர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.

இந்த கூடுதல் வசதிகள் க்ராஸ் போலோ காரிலும் பெற்றிருக்கலாம் என தெரிகின்றது. இதனால் டாப் வேரியண்ட் ரூ.15,000 விலை கூடுதலாக இருக்கும் மற்ற வேரியண்ட்கள் முந்தைய விலையில் இருக்கும்.

மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ ரூ.35,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Volkswagen Polo to get additional features 

loading...

Reply

புதிய வடிவமைப்பில் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ளContact Us
+ +