ஃபோக்ஸ்வேகன் மடக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தயாரிப்பில் மூன்று சக்கரங்களை கொண்ட மடக்கி எடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காரின் பூட்டில் வைத்து எடுத்து செல்லும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஃபோக்ஸ்வேகன் மடக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ‘லாஸ்ட் மைல் சர்ஃபர்’ என பெயிரிடப்பட்டுள்ளது. கார் டிக்கியில் வைத்து எடுத்து செல்லும் அளவில் உள்ள இந்த ஸ்கூட்டர் நெரிசல் மிகுந்த நகரங்களில் பயணிக்க மிக உதவியாக இருக்கும்.

20கிமீ வரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்க முடியம் . லாஸ்ட் மைல் சர்ஃபர் ஸ்கூட்டரின் மொத்த எடை வெறும் 11கிலோ மட்டுமே. இதில் லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

வரும் 2016ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள லாஸ்ட் மைல் சர்ஃபர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.70,000 இருக்கலாம்.

Volkswagen’s Last Mile Surfer electric scooter revealed

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....