அப்பலோ அமேசர் 4G லைஃப் கார் டயர் அறிமுகம்

1 லட்சம் கிமீ மைலேஜ் வரை ஓடக்கூடிய அப்பலோ அமேசர் 4G கார் டயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்பலோ அமேசர் 4G லைஃப் டயர் இந்திய கார்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பலோ அமேசர் 4G லைஃப் கார் டயர்
அப்பலோ அமேசர் 4G லைஃப் கார் டயர் 

நடுத்தர ரக  செடான் மற்றும் யூட்டிலிட்டி ரக கார்களுக்காக இந்த 1 லட்சம் கிமீ மைலேஜ் தரும் டயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 விதமான அளவுகளில் அமேசர் 4G கார் டயர் கிடைக்கும்.

மிக சிறப்பான கிரிப் , குறைவான டயர் சத்தம் மற்றும் பஞ்சர் தாங்கும் திறன் போன்றவற்றை கொண்ட இந்த டயர் மிக சிறப்பான நம்பகதன்மை கொண்டதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பலோ அமேசர் 4G கார் டயர் பரிந்துரைக்கப்பட்ட வாகனங்கள் ஸ்விப்ட்,  டிசையர் ,  அமேஸ் , இன்டிகோ  எர்டிகா , எட்டியோஸ் , சிட்டி , இன்னோவா மற்றும் மொபிலியோ ஆகும்.

Apollo Launches Amazer 4G Life car tyre

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....