கின்னஸ் சாதனை படைத்த நிசான் ஜூக்

நிசான் ஜூக் கார் குட்வூட் சர்க்யூட்டில் இரண்டு சக்கரங்களில் சுமார் 2 நிமிடம் 10 விநாடிகள் பயணித்து உலக சாதனை படைத்து நிசான் ஜூக் RS கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

நிசான் ஜூக் RS

இங்கிலாந்தில் நடைபெற்ற 2015 குட்வூட் ஃபெஸ்டிவல் ஃபார் ஸ்பீடூ (Goodwood Festival Of Speed -FOS ) விழாவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.  டெர்ரி கிராண்ட் தான் செய்த முந்தைய சாதனையை தற்பொழுது முறியடித்துள்ளார்

நிசான் ஜூக் RS காரை சுமார் 48 கிமீ வேகத்தில் 1.86கிமீ தூரத்தை 2 நிமிடம் 10 விநாடிகளை கடந்துள்ளார் . இதற்க்கு முன்பு 2 நிமிடம் 45 விநாடிகளில் கடந்ததே இவரது சாதனையாக இருந்தது.

நிசான் ஜூக் ஆர்எஸ் நிஸ்மோ கார் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட கிராஸ்ஓவர் ரக மாடலாகும். 6 முறை முந்தைய சாதனையை முறியடிக்க வாய்ப்பளிக்க பட்டிருந்தது. ஆனால் டெர்ரி கிராண்ட் முதல் முறையிலே அவரது பழைய சாதனையை முறியடித்தார்.

       

2015 Nissan Juke Nismo RS Guinness Record

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....